Beauty Parlourல் புகுந்து கொள்ளை : சிசிடிவி காட்சி மூலம் சிக்கினர்!

24 August 2020, 7:14 pm
Theft Arrest - Updatenews360
Quick Share

புதுச்சேரி : அழகு நிலையத்திற்குல் புகுந்து அங்கு இருந்த பெண்களை மிரட்டி தங்க செயின் மற்றும் செல்போன்கள் பறித்து சென்ற சென்னையை சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் கலா. இவர் பாரதி வீதி சவரிராயலு வீதி சந்திப்பில் பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.அங்கு ஐந்து பெண்கள் பணி பிரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அழகு நிலையத்திற்குல் நான்கு மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்கிருந்த கலா, தேவி மற்றும் இரு பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க செயின் 10 சவரன் மற்றும் 3 செல்போன்களை பறித்துள்ளனர்.

மேலும் அவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிவிட்டு, அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை சேமிக்கும் ஹார்ட் டிஸ்க்கை எடுத்து கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து கலா அளித்த புகாரை அடுத்து ஓதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிவு செய்து அழகு நிலையம் அருகாமையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்டது சென்னையை சேர்ந்த பிரபல கும்பல் என்றும் அதில் 2 பேர் தற்போது சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்கள் உடன் இணைந்து இந்த செயின் பறிப்பில் ஈடுப்பட்டவர்கள் யார் என்பது குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.