புதுச்சேரியில் செவ்வாய்கிழமை ஊரடங்கு இருக்கா இல்லையா? முதலமைச்சர் நாராயணசாமி விளக்கம்.!!

14 August 2020, 5:51 pm
Pondy CM - Updatenews360
Quick Share

புதுச்சேரி : மக்களின் நடவடிக்கைகளை பொறுத்து செவ்வாய்கிழமை ஊரடங்கை மறு பரிசீலனை செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுக்கும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மாநிலத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் கடந்த 10 நாட்களாக அதிக அளவில் உள்ளதாகவும், ஆகவே தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படுக்களை அதிகரிக்க அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று கூறினார்.

மேலும் புதுச்சேரிக்கு வந்த உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் 2021ஆம் ஆண்டு ஜனவரிக்கு பிறகு தான் கொரோனாவிற்கு மருந்து கிடைக்கும் என தகவல் தெரிவித்துள்ளார். அதுவரை கொரோனாவிற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தியுள்ளார் என தெரிவித்த முதல்வர் நாராயணசாமி, மேலும் 5 மாத காலத்திற்கு தேவையான மருத்து , மருத்துவர்கள், செவிலியர் போன்றவற்களை தயார் படுத்தி கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் சொளமியா
அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

மேலும் மக்கள் அரசு மற்றும் மருத்துவர்களை குறை சொல்லாமல் தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அரசு வாரத்தோறும் செவ்வாய்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல் படுத்த அரசு உத்தரவிட்டு உள்ளது. வரும் செவ்வாய்கிழமை மக்களின் நடவடிக்கைகளை பொறுத்து செவ்வாய்கிழமைகளில் ஊரடங்கு குறித்து மறு பரிசீலனை செய்வது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Views: - 10

0

0