இளைஞர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை : புதுச்சேரியில் பயங்கரம்!!

10 September 2020, 10:28 am
Pondy Murder - updatenews360
Quick Share

புதுச்சேரி : இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி அருகே உள்ள கணுவாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராம்(26). சாராயக்கடையில் காசாளராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இரவு திருக்காஞ்சி பகுதியில் ராம் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்து விட்டு தப்பியோடி உள்ளனர்.

கொலை சம்பவம் தொடர்பாக தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வில்லியனூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ராமின் சகோதரர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டார் மேலும் ராம் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன் விரோதம் காரணமாக இக்கொலை நடந்து இருக்கலாம என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பேரில் 3பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

Views: - 6

0

0