புதுச்சேரியில் புதியதாக 225 பேருக்கு கொரோனா : 29 ஆயிரத்தை நெருங்கும் பாதிப்பு!!

By: Udayachandran
3 October 2020, 2:12 pm
Puducherry Corona - updatenews360
Quick Share

புதுச்சேரி : கடந்த 24 மணி நேரத்தில் 225 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதை அடுத்து பாதிப்பு எண்ணிக்கை 28752 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் 191 நபர்களுக்கும், காரைக்காலில் 21 நபர்களுக்கும், ஏனாமில் 7, நபர்களுக்கும் மாஹேவில் 6 நபர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது 4874 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர், 23344 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுச்சேரியில் 1 நபர்களும், காரைக்காலில் 1 நபரும், கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து மாநிலத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 28752 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார துறை தெரிவித்துள்ளது.

Views: - 39

0

0