“பாஜக வினருக்கும், காவல்துறையினருக்குமிடையே தள்ளு,முள்ளு!-100 க்கும் மேற்பட்ட பாஜக வினர் கைது!”

Author:
22 June 2024, 2:17 pm
Quick Share

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் இந்த சம்பவத்தை கண்டித்து பாஜக சார்பில் தமிழக முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது அதன்படி புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் செய்வதாக பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்காமல் பாஜக வினர் கட்டியிருந்த பாஜக கொடியை அகற்றினர். மேலும் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர்களை வழியிலேயே காவலர்கள் கைது செய்து அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் பாஜக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பாஜக மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் ஒரு குழுவினர் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தபோது அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை கைது செய்ய முயற்சித்தனர். ஆனால் அப்போது காவல் துறையினருக்கும், பாஜகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறக்கூடிய சூழ்நிலையில் காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இரண்டாவது பிரிவாக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போதும் காவல்துறையினருக்கும் பாஜகவினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.அப்போது பெண்கள் உட்பட பாஜக நிர்வாகிகளை காவல்துறையினர் தள்ளி சென்று வேனில் ஏற்றி கைது செய்து அழைத்துச் சென்றனர் .

புதுக்கோட்டையில் மட்டும் இரண்டு இடங்களில் பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்து காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 249

0

0