குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்… 20 நாட்களாகியும் அடையாளம் காணப்படாத சமூக விரோதிகள் : 4 பேர் கொண்ட குழு திடீர் ஆய்வு!!

Author: Babu Lakshmanan
13 January 2023, 1:38 pm
Quick Share

புதுக்கோட்டை : இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கொண்ட சமூக நீதி கண்காணிப்பு குழு ஆய்வு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவையல் கிராமத்தில் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மனிதக் கழிவுகளை கலந்து விவகாரம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட காவல்துறை 11 பேர் கொண்ட காவல் துறை அதிகாரிகளை கொண்ட குழு அமைத்து குற்றவாளிகளை தேடுவதற்கு விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்று 20 தினங்களுக்கு மேலாகியும், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்வதாக வேண்டும் என்று கூறி அதிமுக உறுப்பினர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில சட்டமன்ற உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.

இந்த தீர்மானத்திற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர், உண்மையான குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், அரசு சார்பில் சமூக நீதி கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த குழுவில் பேராசிரியர் சாமிநாதன் தேவதாஸ், பேராசிரியர் ராஜேந்திரன், உறுப்பினர் கருணாநிதி மற்றும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத் ஆகியோர் கொண்ட குழு ஆய்வு செய்து, அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்றும் அறிவித்தார்.

அதன் அடிப்படையில் இன்று இறையூர் வேங்கை வயல் பகுதியில் தமிழக அரசின் குழுவானது ஆய்வு செய்து வருகிறது. மேல்நிலை நீர் தேக்கு தொட்டி இருக்கும் பகுதி ஆதி திராவிட குடியிருப்பு பகுதி மற்றும் மாற்று சமூகத்தினர் வாழும் பகுதி ஆகியவற்றில் ஆய்வு செய்து அவர்களிடம் என்ன நடந்தது என்பது குறித்து கேட்டு அறிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Views: - 629

0

0