பெண் கொடுக்க மறுத்ததால், விரக்தியில் போலியான திருமண பத்திரிகை அடித்து ஊர் முழுவதும் கொடுத்த வாலிபரை இரண்டரை வருடம் கழித்து போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை சேர்ந்த திருவேங்கை நாதன் (40) என்பவர் திருமணத்திற்காக ஆன்லைன் திருமண தகவல் சேவையில் பெண் தேடியுள்ளார். இந்நிலையில் அவருடைய சமுகத்தை சேர்ந்த பெண் ஒருவர் மண்ணச்சநல்லூர் பகுதியில் இருப்பதை ஆன்லைன் திருமண தகவல் சேவையில் தெரிந்து கொண்டார்.
மேலும் படிக்க: இளைஞரின் தலையில் பீர் பாட்டிலால் அடித்து தாக்குதல்… கலவரமான பார்… சிசிடிவி காட்சிகளை வைத்து இருவர் கைது!!
இதையடுத்து பெண் பார்பதற்காக கடந்த 2021 ஆண்டு அவரது குடும்பத்தினருடன் மண்ணச்சநல்லூரில் உள்ள பெண் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, வேங்கைநாதன் வழக்கறிஞர் படிப்பை முழுவதுமாக முடிக்கவில்லை என ஒரு சிலர் கூறியுள்ளனர். இதனை அடுத்து அந்த பெண் மற்றும் பெண் வீட்டார் இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த திருவேங்கை நாதன் ஆன்லைன் திருமண சேவை பதிவில் உள்ள பெண் போட்டோவை தனது போட்டோவுடன் இணைத்து மார்பிங் செய்து போலி திருமண பத்திரிகை தயார்படுத்தி அதை பெண் வீட்டாருக்கு தெரியாமல் இரு ஊர்களிலும் விநியோகம் செய்துள்ளார். இதைக் கண்ட பெண் வீட்டாரின் உறவினர்கள் உடனடியாக பெண் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்னர் திருவேங்கநாதன் அடித்த போலிப் பத்திரிக்கையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து பெண் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் 2021 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
நீண்ட நாட்களாக தேடிய திருவேங்கநாதன் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரை விசாரணை செய்ததில் அந்த பெண்ணை ஒருதலையாக காதலித்ததாகவும், தன்னைத் திருமணம் செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே பெண்ணின் புகைப்படத்தை தன்னுடைய புகைப்படத்துடன் சேர்த்து சித்தரித்து போலி பத்திரிகை அடித்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த திருவேங்கை நாதனை மண்ணச்சநல்லூர் போலீசார் கைது செய்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையம் அழைத்து வந்து பெண் வீட்டார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.