இலங்கை கடற்படையினரால் உயிரிழந்த தமிழக மீனவர் : உடலை ஒப்படைக்கக்கோரி 2வது நாளாக மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

Author: Babu Lakshmanan
21 October 2021, 2:20 pm
Fishers - updatenews360
Quick Share

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீனவர்கள் அப்பகுதி பொதுமக்கள் 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

கோட்டை பட்டிணத்திலிருந்து கடந்த 18ம் தேதி சுரேஷ் என்பவரின் சொந்தமான படகில் இருந்து சேவியர், சுகந்தன் ராஜ்கிரன் ஆகிய 3 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதியதில், படகு கவிழ்ந்து 3 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். அவர்களில், சேவியர், சுகந்தன் ஆகியோரை இலங்கை கடற்படை மீட்டு கைது செய்தனர். ராஜ்கிரன் என்ற மற்றொரு மீனவர் மட்டும் மாயமான நிலையில், பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடலை இதுவரை இலங்கை அரசு தமிழக அரசிடம் இதுவரை ஒப்படைக்காததால் தொடர்ந்து இரண்டாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இருந்தும் மீனவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மீனவர்களின் பிரதான கோரிக்கையாக, இறந்தவர் உடல் மற்றும் உயிரோடு இருக்கும் இரண்டு மீனவர்களை உடனடியாக அனுப்ப வேண்டும், தமிழகத்திற்கு பிரேதம் வந்தவுடன் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும், இறந்த மீனவர் ராஜ்கிரன் குடும்பத்திற்கு நிவாரணமாக 20 லட்சம் வழங்க வேண்டும், உயிரிழந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இலங்கை கடற்படையால் விசைப்படகை மோதி சேதப்படுத்திய விசைப்படகுக்கு 20 லட்சம் வழங்க வேண்டும், இதுபோல் இனிமேல் உயிர்சேதம் நடக்காமல் இருக்க அரசால் எழுத்து பூர்வமாக எழுதி தரவேண்டும், இலங்கையிலுள்ள விசைப்படகையும் மீட்டுத்தர வேண்டும், எடுக்க முடியாத விசைப்படகு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தால் கோட்டைப்பட்டினம் பகுதியில் பரபரப்புடன் சூழ்நிலை காணப்படுகிறது.

Views: - 233

0

0