புரட்டாசி சனிக்கிழமையாவது திறந்திருந்திருக்கலாம் : பூட்டியிருந்த பெருமாள் கோவிலில் பக்தர்கள் வேதனை!!

Author: Udayachandran
10 October 2020, 10:26 am
cbe Perumal Kovil - Updatenews360
Quick Share

கோவை : பாப்பநாய்க்கன்பாளையம் பிரசித்த பெற்ற பெருமாள் கோவில் புரட்டாசி சனிக்கிழமையன்று மூடப்பட்டதால் வெளியே நின்று பக்தர்கள் வேதனையுடன் சாமி தரிசனம் செய்தனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத வழிபாடுகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் கோவையில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதால் தொடர்ந்து சாமி தரிசனம் செய்வதற்கு பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமையான இன்று பொதுமக்கள் பூட்டியிருந்த கதவுக்கு முன் நின்று கோவிந்தா கோவிந்தா என்று சொல்லி இறைவனை வழிபட்டு சென்றனர். மன வேதனையை தீர்த்துக்கொள்ள இறைவழிபாடு மட்டுமே சிறந்த வழி என்பதை உணர்ந்த மக்கள் மீண்டும் கோவில் கதவு அடைக்கப்பட்டதை கண்டு வேதனை அடைந்தனர்.

கொரோனா காலத்தில் சமூக இடைவெளியுடன் தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 49

0

0