5 இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள “புத்தம் புது காலை விடியாதா” படத்தின் டைட்டில் பாடல் வெளியீடு…
Author: Mari8 January 2022, 2:45 pm
கடந்த 2020ஆம் ஆண்டு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜி திரைப்படம்.ஐந்து இயக்குனர்களின் இயக்கத்தில், 5 வித்தியாசமான கதை களங்களை கொண்டு வெளிவந்த இந்த ‘புத்தம் புது காலை’ திரைப்படம் அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. இப்படத்தை முன்னிணி இயக்குனர்கள் கௌதம் மேனன், சுஹாசினி, சுதா கொங்கரா, ராஜீவ்மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகியோரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.
இந்த புத்தம் புது காலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, ‘புத்தம் புதிய காலை விடியாதா’ என்ற தலைப்பில் படம் உருவாகியுள்ளது. இந்தப்படத்தில், தற்போது, நிலவி வரும், கொரோனா சூழ்நிலையை மையப்படுத்திய கதை களங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இந்த படம் ரசிகர்களுக்கு புதுமையான புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ‘புத்தம் புது காலை விடியாதா’ திரைப்படம் தயாராகியுள்ளது. ‘புத்தம் புது காலை’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக தயாராகியுள்ள இந்த படத்திலும் ஐந்து எபிசோடுகள் இடம்பெற்றுள்ளன.
பிரபல இயக்குனர்களான பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா பாலசுந்தரம், சூரிய கிருஷ்ணா மற்றும் ரிசார்ட் ஆண்டனி ஆகியோர் இந்தப்படத்தை இயக்கியுள்ளனர்.
இந்தப்படத்தில், முன்னணி நடிகர்களான ஜோஜு ஜார்ஜ், நதியா, அர்ஜுன் தாஸ், லிஜோமொள் ஜோஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, கௌரி கிஷன், மணிகண்டன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் திலீப் சுப்பராயன், சனந்த், அன்பு தாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக இந்தப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில், வருகிற ஜனவரி 14ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தின் டைட்டில் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்து பாடி நடித்துள்ள இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து பேசிய ஜீவி பிரகாஷ், நாம் பல இன்னல்களில் சிக்கி தவிக்கும் மனிதர்களின் மனங்களில் இசையின் மூலம் தட்டி எழுப்புவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். இந்த பாடல் நிச்சயமாக ரசிகர்களின் மனங்களில் ஆழமாக பதியும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.
0
0