தென் மாவட்டத்தின் முக்கிய தொகுதியில் ராதிகா போட்டி : சரத்குமார் சொன்ன சஸ்பென்ஸ்!!!!

2 March 2021, 4:24 pm
Radika Sarath -Updatenews360
Quick Share

தூத்துக்குடி : நாளை சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தூத்துக்குடி வந்தடைந்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை நடைபெறும் சமத்துவ மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் சரத்குமார் வருகை தந்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு கண்டிப்பாக இந்த தேர்தலில் எதிரொலிக்கும். நாளை நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

ச.ம.க விகிதாச்சாரம் என்ன என்பதை கண்டறிய தனிச்சின்னத்தில் போட்டியிடுவோம். இந்த முறை 1 அல்லது 2 சீட்டுகளுக்காக கூட்டணியிலிருந்து போட்டியிட மாட்டோம். ராதிகா சரத்குமார் தென்மாவட்டத்தில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழு கூட்டத்தில் முடிவுஎடுக்கப்படும் என தெரிவித்தார்.

Views: - 12

0

0