ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம்… முன்னாள் முதலமைச்சர் உள்பட காங்., தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை..!!

Author: Babu Lakshmanan
21 May 2022, 12:40 pm
Quick Share

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது சிலைக்கு காங்கிரஸ் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் சார்பில் அவரது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, ராஜிவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதே போல் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநில தலைவர் சுப்பிரமணியன், பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ராஜிவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

Views: - 919

0

0