ஒரேயொரு செல்பியால் தமிழகத்தில் டிரெண்டான ராகுல் காந்தி… அதிர்ச்சியில் ஸ்டாலின்..!!

25 January 2021, 4:25 pm
rahul gandhi selfie - updatenews360
Quick Share

கரூர் : தமிழகத்தை இன்னும் புரிந்து கொள்ள விரும்புவதாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வழக்கமாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் தமிழகத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் காங்கிரஸ், இந்த முறை ராகுல் காந்தியை தனியாக களம் இறக்கியுள்ளது.

‘வாங்க ஒரு கை பார்க்கலாம்’ என்னும் பெயரில் கொங்கு மண்டலத்தில் 3 நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இன்று தனது கடைசி நாள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் அவர், கரூர் பேருந்து நிலையம் அருகே காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், வாங்கல் மாரி கவுண்டன் பாளையத்தில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் நடத்தினார். அதில், தமிழ் மொழியிலும், கலாச்சாரத்திலும் சுயமரியாதையும் கலந்து கொள்ளதாகவும், தமிழக மக்களின் உணர்வுகளையும், கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ள திருக்குறளை படிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறினார்.

முன்னதாக, பிரச்சாரத்திற்கு சென்ற பகுதியில் சிறுமியின் விருப்பத்தை நிறைவேற்ற கார் மீது ஏற்றி ராகுல் காந்தி செல்பி எடுத்துக் கொண்டார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள தயாராகி விட்ட நிலையில், செல்லும் இடமெல்லாமல் ராகுல் காந்திக்கு கூட்டம் அலைமோதி இருப்பதைக் கண்டு, முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் ராகுல் காந்திக்கு கொடுக்குப்பட்டுள்ள வரவேற்பைக் கண்டு, காங்கிரஸ் விவகாரத்தில் அவசரப்பட்டு விட்டோமோ.. என்ற எண்ணம் கட்டாயம் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எழும் என காங்கிரஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

Views: - 1

0

0