“சாருக்கு ஆத்தாம ஒரு டீ“ : பேக்கரியில் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி!!

23 January 2021, 6:51 pm
Rahul Tea - Updatenews360
Quick Share

திருப்பூர் : தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அருகில் இருந்த டீக்கடைக்குள் சென்று டீ அருந்தினார்.

கோவை மண்டலத்தில் மூன்று நாட்கள் தேர்தல் பிரச்சார பயணமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தந்தார். காலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் மதியம் திருப்பூர் மாவட்டம் அவிநாசி வருகை தந்தார்.

அவிநாசியில் காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து காரில் சென்ற ராகுல் காந்தி அவிநாசியை அடுத்துள்ள அவிநாசியம் பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்த பொழுது காரை திடீரென நிறுத்த சொல்லி காரில் இருந்து இறங்கி அருகில் இருந்த பேக்கரி கடைக்கு சென்றார்.

அவருடன் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் உடன் சென்று அங்கு 15 நிமிடத்திற்கும் மேலாக அமர்ந்து டீ சாப்பிட்ட பின்னர்.அங்கு இருந்த பெண்மணியிடம் உடல் நலம் விசாரித்து அவருக்கு இனிப்புகள் வழங்கினார். அதனை தொடர்ந்து அங்கு பணியாற்ற கூடிய ஊழியர்களுடன் செல்பி எடுத்து கொண்டார்.

ராகுல் காந்தியின் திடீர் வருகையால் பேக்கரி முன்பு கூட்டம் கூடியது.தொடர்ந்து அங்கு திரண்ட மக்களிடம் கை கொடுத்து விட்டு விடை பெற்று சென்றார்.ராகுல் காந்தி திடீர் என பேக்கரி கடைக்கு சென்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.ராகுல் காந்தியை காண்பதற்காக பெண்களும் குழந்தைகளும் ஆர்வமாக திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Views: - 2

0

0