கல்லூரி மாணவியுடன் தண்டால் எடுத்த ராகுல் : ஒரு கையால் தண்டால் எடுத்து சவால்!! (வீடியோ)

1 March 2021, 5:28 pm
Rahul Push Up -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடலின் போது ஒரு கையால் தண்டால் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முளகுமூடு புனித ஜோசப் மேல்நிலை பள்ளிக்கு சென்றார்.

அங்கு உள்ள சர்ச்சுக்கு சென்று பிராத்தனை செய்த பிறகு அங்கு மாணவ மாணவியர்கள் நடத்திய வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் கயிறு ஏறும் நிகழ்ச்சியை பார்வையிட்டார் . பின்னர் அங்கிருந்த மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார் .

தொடர்ந்து மாணவிகளை அழைத்து பாடச்சொல்லியதுடன் அவர்களை உற்சாகப்படுத்த மாணவிகள் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஆகியோருடன் கைகோர்த்தபடி நடனம் ஆடினார்.

இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். நடனமாடியதோடு மட்டுமல்லாமல் மாணவி ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க PUSH-UP(தண்டால்) எடுத்து பார்வையாளர்களிடம் கை தட்டல்களை பெற்றார்.

மேலும் ஒரு கையில் தண்டால் எடுக்க முடியுமா என மாணவியிடம் கேட்ட அவர்இ ஒரு கையால் தண்டால் எடுத்து மாணவிக்கு சவால் விடுத்தார். இந்த காட்சிகள் இணையத்தில் வரைலாகி வருகிறது.

Views: - 22

0

0