கனிமவள இயக்குனர் ஆறுமுக நயினாருக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு : முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
2 February 2022, 7:10 pm
Raid in Mineral Director House-Updatenews360
Quick Share

விழுப்புரம் : கனிம வள இணை இயக்குனர் ஆறுமுக நயினாரின் இல்லத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

விழுப்புரம் மண்டல கனிம வள இணை இயக்குனராக ஆறுமுக நயினார் பணியாற்றி வருகிறார். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக புகார்கள் எழுந்ததையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் திருநெல்வேலியிலுள்ள பாளையங்கோட்டை, விழுப்புரம், சென்னை ஆகிய இடங்களில் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்நிலையில் இன்று விழுப்புரம் கிருஷ்ணா நகரிலுள்ள வாடகை  எடுத்து தங்கி இருக்கும் ஆறுமுக நயினாரின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி. எஸ். பி. தேவநாதன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் சோதனை மேற்கொண்டனர்.

காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை சோதனையிட்ட போலீசார் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 351

0

0