தொடர் மழை காரணமாக பொங்கல் பொருட்கள் விற்பனை மந்தம்.! கண்ணீர் விடும் கரும்பு வியாபாரிகள்

13 January 2021, 5:32 pm
sugarcane - updatenews360
Quick Share

கன்னியாகுமரி: தொடர் மழையின் காரணமாக குமரியில் பொங்கல் பொருட்கள் விற்பனை மிகவும் மந்தமான நிலையில் உள்ளதால், கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொங்கல் சிறப்பு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் விவசாயிகள், தொழிலாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பண்டிகை அன்று காலை சூரிய பகவானுக்கு பச்சரிசி பொங்கலிட்டு காய்கறிகள், மஞ்சள்குலைகள், கிழங்கு வகைககள் உள்ளிட்டவைகளை படையலாக வைத்து வழிபடுவது காலம் காலமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு பொங்கல் விழா நாளை கொண்டாடப்படும் நிலையில், கடந்த 4 நாட்களாக குமரி மாவட்டம் முழுவதும் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு லட்சக்கணக்கில் முதலீடு செய்து கரும்பு மற்றும் இதர பொருட்களை கொள்முதல் செய்த வியாபாரிகள் பொதுமக்கள் அதிகம் வெளியில் நடமாட்டம் இல்லாததால் வியாபாரம் இன்றி நஷ்டம் ஏற்படும் சூலையில் உள்ளனர்.

Views: - 7

0

0