கோவையில் விடிய விடிய பெய்த மழை : நேற்று பெய்த மழை அளவு தெரியுமா?

15 May 2021, 9:41 am
Cbe Rain Status - Updatenews360
Quick Share

கோவை : கோவை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரத்தை பேரிடர் மேலாண்மைத் துறையினர் வெளியிட்டு வருகின்றனர்.

அதன்படி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று பெய்த மழை அளவு விவரம் பின்வருமாறு:
அன்னூரில் 3 மில்லி மீட்டர் மழை, மேட்டுப்பாளையத்தில் 5 மில்லி மீட்டர் மழை, வால்பாறையை அடுத்த சின்கோனா பகுதியில் 65 மில்லி மீட்டர் மழை, வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம் பகுதிகளில் 70 மில்லி மீட்டர் மழை, வால்பாறை தாலுகாவில் 63 மில்லி மீட்டர் மழை, சோலையாரில் 99 மில்லி மீட்டர் மழை, ஆழியாரில் 13.4 மில்லி மீட்டர் மழை, சூலூரில் 5 மில்லி மீட்டர் மழை, பொள்ளாச்சியில் 17 மில்லி மீட்டர் மழை, கோவை தெற்கில் 10 மில்லி மீட்டர் மழை, கோவை விமான நிலைய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8.2 மில்லி மீட்டர் மழை, பெரியநாயக்கன்பாளையத்தில் 7.2 மில்லி மீட்டர் மழை, தமிழ்நாடு வேளாண் பல்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் 9 மில்லி மீட்டர் மழை என மொத்தமாக 443.8 மில்லிமீட்டர் மழை நேற்று பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் சரசரியாக 31.70 மில்லி மீட்டர் என்ற அளவில் நேற்று மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 163

0

0