அடுத்த 48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை : வானிலை மையம் எச்சரிக்கை!!

6 September 2020, 1:39 pm
Rain In TN - Updatenews360
Quick Share

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

பிற கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல தேனி திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை மற்றும் புதுகோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 0

0

0