சின்ன தல ரெய்னாவுக்கு விருது கொடுத்த மாஸ்டர் இயக்குநர்!

8 March 2021, 10:14 am
Quick Share


சின்ன தல என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு, விளையாட்டுத்துறையில் கோல்டன் கிலோப் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் திரைக்கு வந்த சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த மாஸ்டர் படத்தை இயக்கியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அடுத்த தாக, தளபதி66 படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில், கடந்த 7 ஆண்டுகளாக Behindwoods சார்பில், Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த நடிகர், நடிகை, இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள், காமெடியன்கள், ஒளிப்பதிவாளர்கள் என்று பலருக்கும் விருது வழங்கி வருகிறது.
அந்த வகையில், இந்த ஆண்டு முதல் முறையாக Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை வழங்கி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டுள்ளார். லோகேஷ் கனகராஜ், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர், குஜராஜ் சிங்கம் சுரேஷ் ரெய்னாவுக்கு விருது வழங்கியுள்ளார். ஆம், விளையாட்டுத்துறையில், கோல்டன் குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன் என்ற பிரிவில், Behindwoods Gold Icons விருது வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக அணியிலிருந்து விலகிய சின்ன தல ரெய்னா, இந்த ஆண்டில் நடக்கும் ஐபிஎல் போட்டியில், பங்கேற்பதற்காக இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள சுரேஷ் ரெய்னா, Behindwoods Gold Icons விருது பெறுவதற்கு நேற்று சென்னை வந்தார்.


ஆனால், விருது பெற்ற கையோடு அவர் மீண்டும் குஜராஜ் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. இதையடுத்து, ஒரு மாத த்துக்கு முன்னதாகவே சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 1326

0

0