தமிழக லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் கேட்டு தரைக்குறைவாக பேசிய ராஜஸ்தான் ஆர்.டி.ஓ

25 August 2020, 2:42 pm
Lorry Driver - Updatenews360
Quick Share

தமிழக லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கும் ஆர்டிஓ ஓட்டுநர்களை தரக்குறைவாக பேசியதால் நடுரோட்டில் லாரியை எடுக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பெரும் வர்த்தக பாதிப்பை சந்தித்தது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து உள்ளிட்ட தேவையான பொருட்கள் மட்டும் ஒரு மாநிலத்தில் இருந்து மற்ற மாநிலங்கள் சென்று வருகிறது.

இ-பாஸ் நடைமுறை உள்ளதால் காய்கறிகள், பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மட்டும் சென்று வர அனுமதியிருந்தது. ஆனால் சில ஆர்டிஓக்கள் இன்னும் லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கி வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி சமூகவலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அருகே தமிழக லாரி ஓட்டுநர்களிடம் லஞ்சம் வாங்கு ஆர்டிஓ., ஹிந்தியில் தரக்குறைவான வார்த்தைகளால் ஓட்டுநரை திட்டியுள்ளார்.

ஆனால் தமிழக ஓட்டுநருக்கு இந்தி தெரிந்ததால், ஆர்டிஓவிடம் தவறாக பேசாதீர்கள் என கூறியுள்ளார். ஆனால் ஆர்டிஓ தரக்குறைவாக பேசுவதை நிறுத்ததாதால், ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர்கள் நடுரோட்டில் குறுக்கே லாரியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.