இது தானா சேர்ந்த கூட்டம்… ரசிகர்கள் மத்தியில் ஊர்வலமாக வந்த ரஜினி : மாஸ் என்ட்ரி கொடுத்த வீடியோ வைரல்!!

Author: Udayachandran RadhaKrishnan
4 June 2023, 1:22 pm
Rajini - Updatenews360
Quick Share

ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால்சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் ஹீரோவாக நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

அதனை தொடர்ந்து தற்போது ரஜினி புதுச்சேரியில் இருக்கும் தகவலை அறிந்த ரசிகர்கள் உடனடியாக ரஜினி இருக்கும் இடத்திற்கு சென்றார்கள். அங்கு கூட்டம் கூட்டமாக மக்கள் கூடிய புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மக்கள் கூட்டமாக வந்ததை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய காரில் இருந்து வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கையை அசைத்து உற்சாகப்படுத்தினார். மக்கள் கூட்டமாக கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது பிறகு, போலீசார் வந்து போக்குவரத்தை சரி செய்தனர்.

Views: - 199

0

0