ரஜினி வீட்டு வாசலில் உதவிக்காக காத்திருந்த மாற்றுத்திறனாளிப் பெண் : ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran
2 December 2020, 6:32 pm
Rajini Help- Updatenews360
Quick Share

சென்னை : தனது குழந்தையின் கல்விக்காக உதவி வேண்டி ரஜினியின் வீட்டு வாசலில் காத்திருந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு ரஜினி நிதியுதவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நடிகர் ரஜினி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அரசியல் குறித்து ரஜினி எடுக்கும் முடிவுக்காக அவரது ரசிகர்கள் ரஜினி வீட்டின் முன்பு காத்திருந்து வருகின்றனர்.

இதனிடையே திருச்சியில் இருந்து கௌரி ராமையா என்ற பெண் தனது குழந்தைக்க கல்வி செலவுக்ககாக உதவி கேட்டு காத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் முதல் எந்த ஒரு வேலையும் கிடைக்காமல் சிரமப்பட்டு வருவதாகவும், மகன் 11ம் வகுப்பு, மகள் பத்தாம் வகுப்பு படித்து வருவதாகவும் தற்போது கொரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்து படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன் கூட வாங்க பணம் இல்லை என குமுறினார்.

மேலம் அரசு கொடுத்த மாற்றுத்தினாளி மூன்று சக்கர சைக்கிள் தற்போது பழுதாகிவிட்டதால் காய்கறி வியாபராம் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும், தனது கணவர் ஆஸ்துமா நோயால் எந்த பணிக்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடப்பதாக வருத்தப்பட்டார்.

Image

இதனால் வேறு வழியின்றி சென்னை வந்து அரசியல் தலைவர்களை சந்தித்து நிதி உதவி கேட்பதற்காக சென்னைக்கு வந்ததாகவும், நடிகர் ரஜினியை சந்தித்து உதவி கிடைத்தால் மூன்று சக்கர வாகனங்களை வாங்கி ஏதாவது வேலை செய்து பிழைத்து கெள்ள வந்ததாக மனமுறுகி கூறினார்.

Image

இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் தனது உதவியாளர் மூலம் அந்த பெண்ணுக்கு நிதியுதவி அளித்து, மேலும் அவருடைய குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். வறுமையில் உள்ள மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 45

0

0