தமிழகம்

ரஜினி – சீமான் திடீர் சந்திப்பு – இதுதான் காரணமா?

ரஜினிகாந்த் உடன் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் திடீரென சந்திப்பை மேற்கொண்டது அரசியல் மேடையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று திடீரென நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து உள்ளார். இது குறித்தான புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ள நாதக நிர்வாகி சாட்டை துரைமுருகன், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்த அண்ணன் சீமான் !” என குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல், புலி மற்றும் கழுகு சேர்ந்து இருப்பதைப் போன்ற ஒரு புகைப்படத்தையும் சாட்டை துரைமுருகன் பதிவிட்டு உள்ளார். இதனை அரசியல் ரீதியாக, இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளை சீமானுக்கு குறிப்பிடும் வகையிலும், ரஜினிகாந்தை கழுகாக குறிப்பிடும் வகையிலும் பார்க்கலாம்.

ஆனால், தற்போதைய அரசியல் சூழலைப் பார்க்கும்போது, இது முற்றிலும் மாறுபடுகிறது. காரணம், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பெயரையும், ஏன், சினிமா வணிகத்தில் இந்தியத் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைக்கும் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி உள்ளார்.

ஆரம்பத்தில், தன்னை எதிர்த்தாலும், தான் அவரை ஆதரிப்பேன் எனக் கூறி வந்த சீமான், தவெக முதல் மாநாட்டுக்குப் பிறகு இனி தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என்று, ‘திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள்’ என விஜயின் பேச்சுக்கு உடன்படாத நிலையில் நிற்கிறார். இதனால், விஜய் ரசிகர்கள் அல்லது தவெக தொண்டர்கள், சீமானின் தம்பிகள் உடன் சமூக வலைத்தளங்களில் மோதி வருகின்றனர்.

அதேநேரம், சீமானின் நாம் தமிழர் கட்சியின் பல்வேறு பகுதிகளில் பிரபலமான முகமாக விளங்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது சீமானுக்கு சற்று பதற்றத்தைக் கொடுக்கிறது எனலாம். அது மட்டுமல்லாமல், அவர்கள் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக வரும் செய்திகள், அதற்கு மேலாக சீமானுக்கு தலை வலியாக அமைந்து விட்டது எனலாம்.

இது ஒருபுறம் இருக்க, சீமானோ ரஜினிகாந்தைச் சந்தித்தது அதே அரசியல் காரணத்திற்காகவா என்ற சந்தேகமும் எழுந்து உள்ளது. 2021 தேர்தலுக்கு முன்பு கட்சியை தொடங்க ஆயத்தமாக இருந்த ரஜினியை குறி வைத்து, தமிழன் தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என சீமான் பேசி வந்தார். இது ரஜினி ரசிகர்கள் – சீமானின் தம்பிகள் இடையே மோதலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மீண்டும் ரஜினிகாந்த் உடன் சீமான் சந்திப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், கழுகை முதன்மைப்படுத்தியது, அரசியலில் விஜய் உடன் மல்லுக்கட்ட ரஜினியை கருவியாகப் பயன்படுத்தி, அவரது ரசிகர்களை விஜய்க்கு எதிராக திருப்பவா என்ற கேள்வியும் அரசியல் மேடையில் எழுந்து உள்ளது. ஏனென்றால், காக்கா – கழுகு கதையில் ரஜினி, விஜய் இருவரும் சிக்கி, பின்னர் ரசிகர்களுக்கு விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலைக்கனத்தில் ஆடும் ரீல் நடிகை..கண்டுகொள்ளாத நடிகர்..இப்படியே போனா அவ்ளோ தான்..!

ஆனால், இவை இப்படி இருக்க, இது எதுவும் இல்லை, இது வேட்டையன் பட பாராட்டுக்கு நன்றி தெரிவிப்பது தொடர்பான சந்திப்பு மட்டுமே என்பதும் தகவலாக இருக்கிறது. கடந்த அக்டோபர் 12ஆம் தேதி சீமான், வேட்டையன் படத்தைப் பார்த்துவிட்டு, ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதன் பின்னர், இருவரும் சந்திக்க முடிவு செய்த நிலையில், கூலி படப்பிடிப்பு, அரசியல் மேடைகள் என இருவரும் பிஸியாக, சமீபத்தில் தான் இந்த சந்திப்பு நிகழ்ந்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பின் போது சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறுகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.