அமெரிக்கா செல்கிறார் நடிகர் ரஜினி : சிகிச்சைக்காக மத்திய அரசிடம் அனுமதி!!!

14 June 2021, 7:47 pm
Quick Share

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக சில நாடுகள் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களை அனுமதிக்க மறுத்தன. தற்போது அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக ரஜினிகாந்த் செல்லவுள்ள நிலையில் அதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் நடிகர் ரஜினிகாந்த். மேலும் அவருடன் சேர்ந்து குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இந்நிலையில் இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்கின்றனர். ரஜினி வைத்த கோரிக்கையை மத்திய அமைச்சர்கள் ஏற்ற நிலையில் அவருக்கு அமெரிக்காவுக்கு தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது.

Views: - 287

3

0