திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க ரஜினியால் மட்டுமே முடியும் – தமிழருவி மணியன்

By: Aarthi
2 October 2020, 11:29 am
tamilaruviaboutrajini-updatenews360
Quick Share

திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை ரஜினிகாந்த் மீட்பார் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் திராவிட கட்சிகளிடம் இருந்து தமிழகத்தை விடுத்து சரித்திர சாதனையை நிகழ்த்திக் காட்டுவார் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாற்று அரசியலை முன் நிறுத்துவோம்.

திராவிட கட்சிகளிடமிருந்து தமிழகத்தை விடுவிக்க, ரஜினிகாந்தால் மட்டுமே அந்த சரித்திர சாதனையை நிகழ்த்திக்காட்ட முடியும். காந்தி பிறந்தநாளில், காமராஜர் மறைந்தநாளில் இந்த இருவர் தம் கனவுகளை நனவாக்க அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கும் ரஜினிகாந்த் முயற்சிக்கு உறுதுணையாக நிற்போம் என தமிழருவி மணியன் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 37

0

0