பாமகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அன்புமணி ராமதாஸ் குடும்பத்துடன் திருப்பதி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அன்புமணியும் அவரது மனைவி செளமியாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், அவரது ஆதரவாளர்களால் சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
இதற்கு மறுபக்கமாக, ராமதாஸின் இரண்டாவது மனைவியாக கருதப்படும் செவிலியர் சுசீலாவுடன் அவர் இருக்கும் புகைப்படமும் சமீபத்தில் வெளியாகி பேசுபொருளானது.
ராமதாஸுடன் நீண்டகாலமாக இணைக்கப்பட்டு பேசப்பட்டவர் சுசீலா. இவரை மையமாக வைத்தே அப்பா-மகன் இடையே மோதல் தீவிரமானதாக பாமக உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாமல்லபுரத்தில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ‘கால்டன் சமுத்திரா’ ஹோட்டலில் நடந்த ராமதாஸ்-சுசீலா தம்பதியின் 50-வது திருமண விழா, இந்த மோதலுக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி, பாமகவில் உள்ள பிளவை மேலும் தெளிவாக்கியுள்ளன.
2026 சட்டமன்றத் தேர்தலை பாமக இரண்டு அணிகளாக பிரிந்து எதிர்கொள்ளும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்புமணிக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகளுடன் ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பொதுக்குழுவில் அன்புமணி “காலிச்சேர்” போட்டு ராமதாஸை அவமானப்படுத்தியதாகவும், இதற்கு பதிலளிக்க 7 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால், அன்புமணி இதற்கு பதிலளிக்காமல் தனது பணிகளை தொடர்கிறார். இதனால், அவரை சஸ்பெண்ட் செய்ய ராமதாஸ் தயாராகி வருவதாகவும், செயல் தலைவர் பதவியை ராமதாஸின் மகள் காந்திமதிக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், ராமதாஸ் திமுகவை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 10.5% இட ஒதுக்கீடு மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என அறிவாலயத்திற்கு தூது விடப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை திமுக பரிசீலித்து வருவதாகவும், இது பாமக-திமுக கூட்டணிக்கு வழிவகுக்கலாம் எனவும் தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாமகவில் அப்பா-மகன் மோதல், சுசீலா விவகாரம், திமுகவுடனான பேச்சுவார்த்தை என பல திருப்பங்களுடன் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அன்புமணியின் திருப்பதி பயணமும், ராமதாஸின் அடுத்த நகர்வும் பாமகவின் எதிர்காலத்தை எப்படி வடிவமைக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.