15 நாட்களுக்கு பிறகு ராமநாதசுவாமி கோவில் திறப்பு: ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்…புனித நீராடி சாமி தரிசனம்..!!
Author: Aarthi Sivakumar16 August 2021, 1:23 pm
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் 15 நாட்களுக்குப் பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ராமநாதசுவாமி ஆலயத்தில் ஆடித் திருவிழா தொடங்கியதை அடுத்து கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு உத்தரவின் பேரில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு கடந்த 1ம் தேதி முதல் தடை விதித்தனர்.
கோவிலில் குருக்கள் மட்டும் அன்றாட பூஜைகள் செய்து வந்தனர். கோவிலில் நடந்த 17 நாட்கள் திருவிழா நிகழ்ச்சிகள் வளாகத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், 15 தினங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று ராமேஸ்வரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலையில் காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடினர் பின்னர் ராமேசுவரம் கோவிலில் உள்ள சுவாமி சன்னதி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர்.
கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் புனித நீராட முடியாமல் வேதனையடுத்துள்ளனர். தீர்த்தக்கிணறுகளில் நீராடவும் அனுமதி அளிக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
0
0