“ஆடைகளை அவிழ்த்து நில்“ சொன்னபடி கேட்கலைனா… பெண்களை மிரட்டிய செல்போன் கடை கும்பல்.!!

7 July 2020, 5:37 pm
Ramanathapuram Cell Phone Crime -Updatenews360
Quick Share

இராமநாதபுரம் : செல்போன் ரீசார்ஜ் செய்ய கடைக்கு சென்ற பெண்ணிடம் ANY DESK செயலியை பதிவிறக்கம் செய்ய சொல்லி அந்தரங்க படங்களை எடுத்து மிரட்டி ஆபாசமாக படமெடுத்ம மேசாடி கும்பல்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களின் போட்டோவை மார்பிங் செய்து ஆபாசபடம் எடுத்து மிரட்டி பணம் பறித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.

இந்த புகார் தொடர்பாக பெண் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட கண்பாணிப்பாளரின் கைப்பேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட காவலர்களே அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியில் உள்ள கணவனால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், “ஏர்பாத் நெட் கபே“ என்ற கடையில் ரீசார்ஜ் செய்ய சென்றுள்ளார். கடையில் இருந்த உரிமையாளர்களான பாதுஷா, ஹாஜி மற்றும் கடையின் ஊழியர் ஒருவர், வீட்டில் இருந்தே ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். கடைக்கு வரவேண்டிய அவசியமில்லை என கூறி Any Desk செயலியை பெண்ணின் மொபைலில் பதிவேற்றம் செய்து தந்துள்ளனர்.

இதையடுத்து செல்போனை வாங்கி சென்ற அந்த பெண், தனது செல்போனில் வைத்திருந்த போட்டோக்கள் மற்றும் என்னென்ன பயன்படுத்துகிறார்களோ அதை அப்படியே ANY DESK ஆப் மூலம் தெரிந்து கொண்ட கடையின் உரிமையாளர்கள், அந்தரங்க புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

இதை வைத்து கடையின் உரிமையாளர்கள் அந்தப் பெண்ணை மிரட்டியுள்ளனர். இதில் கடை ஊழியரான சகாபுதீன் என்பவன், அந்த பெண்ணிடம், பயப்பட வேண்டாம் நான் தங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி தனியாக வரவழைத்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இந்த கொடுமையை செல்போனில் படம் எடுத்து அதை வைத்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளனர். கேட்ட பணம் கொடுக்கவில்லை என்றால், வெளிநாட்டில் இந்த வீடியோவை பரப்பி விடுவேன் என மிரட்டியுள்ளான். அவர்கள் கேட்ட பணம் இல்லை என்பதால், அந்த காமுகன்கள், வீடியோவை வெளிநாடுகளில் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கல் அனுப்பி விட்டுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கதறியபடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கூறியுள்ளார் அந்த பெண்.

இதையடுத்து சைபர் குற்றப்பிரிவு உதவியுடன் தனிப்படை அமைத்து கீழக்கரை உதவி ஆய்வாளர் யமுனா தலைமையிலான போலீசார் விசாரணையை தொடங்கினர். இதையடுத்து “ஏர்பாத் நெட் கபே“ கடையில் சோதனை நடத்தி, 3 பேரையும் கைது செய்த போலீசார், 4 செல்போன், ஒரு மடிக்கணினியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கணவர் வெளிநாட்டில் உள்ள போது வீட்டில் தனிமையில் உள்ள பெண்கள் என தேர்ந்தெடுத்து அவர்களிடம்இ ANY DESK செயலியை பதிவேற்றம் செய்ய வைத்து அவர்களின் அந்தரங்க போட்டோக்களை எடுத்து மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர். கடைக்கும் ஏராளமான பெண் வாடிக்கையாளர்கள் உள்ளதால் சுலபமாக இந்த வேலை கட்சிதமாக மேற்கொண்டு வந்தனர்.

மேலும் பெண்களின் போட்டோக்கள், மற்றும் அந்தரங்க வீடியோக்களை மலேசியாவில் உள்ள நண்பருக்கு பாதுஷா அனுப்பி வைப்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் தொடர்ந்து வேறேனும் நபர்கள் தொடர்பில் உள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ANY DESK போன்ற விபரீதமான செயலியை வைத்து மோசடி செய்பவர்கள் ஏராளமானவர்கள் உண்டு என்பதை பெண்கள் உணர வேண்டும், வெளியாட்களை நம்பி செல்போன் எண்ணை கொடுத்தால் எந்த மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது.