கொன்னுடுவேன் எவனா இருந்தாலும்… முடிஞ்சா, உள்ள தூக்கிப் போடு… போலீசாரை வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியர்..!

Author: Babu Lakshmanan
15 June 2022, 12:34 pm
Quick Share

பணியில் இருந்த போலீசாரை தகாத வார்த்தைகளில் பேசி வம்புக்கு இழுத்த நகராட்சி ஊழியரின் வீடியோ சமூகவலைதளங்களில் வெகுவாக பரவி வருகிறது.

தமிழகத்தில் காவல் துறையின் உயர் அதிகாரிகள், காவல் நிலையங்களுக்கு வரும் கைதிகள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையாக நடக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியில் இருந்த கரிகாலன் என்ற போலீசாரை ஒருவர் மிரட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பணியில் இருந்த போலீசார், அவரை இது மருத்துவமனை பகுதி சற்று தள்ளி நின்று தொலைபேசி பேசுமாறு கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், “நீ வந்தாலும் உன்னை அடிப்பேன். என்னை உள்ளே தூக்கிப் போடு. நீ போலீசாக இருந்தால் நான் பயப்பட மாட்டேன். கொன்னுடுவேன் எவனா இருந்தாலும்.. அடி, அடி…,’ என்று கூறி அலப்பறை செய்துள்ளார்.

மிரட்டும் தொனியில் போலீசாரை மிரட்டும் இந்த வீடியோவை அருகிலிருந்தவர்கள் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனிடையே, இதுகுறித்து போலிசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் நகராட்சி ஊழியர் என தெரியவருகிறது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி போலீசார் வருகின்றனர்.

பணியிலிருந்த போலீஸாரை நபர் ஒருவர் அநாகரீகமாக மிரட்டும் தொனியில் பேசிய சம்பவம் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது

Views: - 409

0

0