தமிழகத்தில் இன்று தொடங்கியது ரம்ஜான் நோன்பு: இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை…

14 April 2021, 8:26 am
Quick Share

சென்னை: ரம்ஜான் நோன்பு இன்று முதல் தொடங்கும் என்று அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் அறிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் இதற்கான பிறை தெரியும் நாளில், நோன்பு தொடங்குவதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி வெளியிடுவார்.

இந்நிலையில், இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஏப்ரல் 12ம் தேதி மாலை ரமலான் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால் புதன் கிழமை அன்று ரமலான் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி ரம்ஜான் நோன்பு தொழுகை இன்று முதல் தொடங்குகிறது. 30 நாட்கள் நோன்பு முடிவில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

நடப்பு ஆண்டின் ரமலான் நோன்பு இன்று தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை செய்து வருகின்றனர். பிறை தென்பட்டதையடுத்து சிறப்பு தொழுகையுடன் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் தொடங்கினர்.

Views: - 37

0

0