கட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி கூப்பன் அறிவித்த ரங்கசாமி

Author: kavin kumar
28 October 2021, 5:28 pm
Quick Share

புதுச்சேரி: புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கட்டத் தொழிலாளர்களுக்கு ரூ. 3 ஆயிரமும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் கூப்பனாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, புதுவை மாநிலத்தில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக 18 வயதை கடந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500 வீதம் அவர்கள் வங்கியில் வழங்கப்படும் என்று அறிவித்திருந்ததாக தெரிவித்தார், இதன்படி புதுவை மாநிலத்தில் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 412 பேருக்கு ரூ.6 கோடியே 22 லட்சத்து 6 ஆயிரம் அவர்களின் வங்கி கணக்கில் இன்று முதல் வரவு வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார், அதேபோல் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆயிரம் ரூபாயும், கட்டடத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு ரூ.3 ஆயிரம் தீபாவளி கூப்பனாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Views: - 275

0

0