உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாணவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டும் : மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்…

Author: kavin kumar
28 February 2022, 6:14 pm
Quick Share

புதுச்சேரி : உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரி மாணவர்களை மீட்டு பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை மீட்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரண்டாவது முறையாக கடிதம் எழுதியுள்ளார்.

ஏற்கனவே கடந்த 25ஆம் தேதி பிரதமர், உக்ரைனில் உள்ள இந்திய தூதர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருந்த முதலமைச்சர் ரங்கசாமி, தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். 

இன்று அவர் எழுதி உள்ள கடிதத்தில் உக்ரைனில் சிக்கிக் கொண்டுள்ள புதுச்சேரியை சேர்ந்த 23 மாணவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க இந்திய தூதரகம் மூலம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அவர்களை விரைவில் பாதுகாப்பாக புதுச்சேரி கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Views: - 661

0

0