ஆற்றில் குளித்த 3 இளம்பெண்கள் நீரில் மூழ்கி பலி ; காவலர் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்..!!

Author: Babu Lakshmanan
5 September 2022, 1:00 pm
Quick Share

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வட்டம் தக்கோலம் கிராமம் தக்கோலம் கொசஸ்தலை ஆற்று செக் டேம் பகுதியில் குளித்த மூன்று இளம் பெண்கள் நீரில் முழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் வசித்து வருபவர் முகமது ஜவ்லக். இவர் சென்னையில் காவல்துறையில் பணியாற்றி வருகின்றார். இதில் முகமது ஜவ்லக் என்பவரின் மகள் பவுசியா(13), மேலும் இவரின் வீட்டிற்கு ஸ்ரீ பெருமந்தூரிலிருந்து வந்த உறவினர்கள் தாஜிதீன் என்பவரின் மகள்கள் பரிதா பானு (21), திருமணமான மற்றோரு ரசூல் (24) (க/பெ ஜாபர்) முவரும் ஆற்றில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கியுள்ளனர்.

உடனடியாக உறவினர்கள் நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்கள்.

மூவரையும் பரிசோதித்த அரக்கோணம் அரசு மருத்துவர் இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதையடுத்து, மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தக்கோலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்கள்.

Views: - 395

0

0