வேலை வாங்கி தருவதாக கூறி பெண் பாலியல் பலாத்காரம்… தமிழகத்தை உலுக்கிய பயங்கரம்!!!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள கீழப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26) இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இவரது உறவினர் ஒருவர் தனக்கு தெரிந்த இளம் பெண்ணுக்கு ஓசூரில் வேலை பெற்று கொடுக்கும்படி மணிகண்டனை நாடி உள்ளார்.
இதனையடுத்து மணிகண்டனும் அந்த இளம் பெண்ணிடம் செல்போனில் பேசி ஒசூருக்கு அழைத்துள்ளார். ஓசூருக்கு வந்த அந்த இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறிய மணிகண்டன் அவரை ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று அத்துமீறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண் தன்னை காப்பாற்றுமாறு கதறி அழுது அவரிடமிருந்து தப்பித்து ஓடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த இளம் பெண் பொதுமக்கள் உதவியுடன் ஓசூர் நல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மணிகண்டனை கைது செய்தனர். இதனையடுத்து அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் ஓசூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.