“அண்ணாச்சி இது ரொம்ப ரேர் பீஸ்“ : 5 அடி ராட்சத மண்ணுளி பாம்புக்காக நடந்த நாடகம்!!
5 February 2021, 1:42 pmதிருவள்ளூர் : 5 அடி உயர ராட்சச மண்ணுளிப் பாம்பை 2 கோடி ரூபாய்க்கு நூதன முறையில் மோசடி செய்து விற்க முயன்ற கும்பலை நூதன முறையில் நாடகமாடி பாம்பினை விலை பேசி வாங்குவது போன்று வனத்துறையினர் நடித்து மூன்று பேரை கைது செய்தனர் .
திருவள்ளூர் மாவட்ட வனக் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் ரகசியமாக மண்ணுளிப் பாம்புகளை வெளிநாட்டிற்கு கடத்தி விற்பனை செய்து வருவதாக எழுந்த புகாரை அடுத்து தனி பிரிவினர் மேற்கொண்ட விசாரணையில் மணவாளன் நகர் பகுதியில் விஜயகுமார், பொன்னையன், தங்கமணி என்ற மூவர் மண்ணுளிப் பாம்பை வளர்த்து வருவதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து மூவரிடம் மண்ணுளிப் பாம்பை வாங்குவது போன்று நடித்த வனத்துறையினர் அவர்களிடமிருந்த 5 அடி உயர மண்ணுளி பாம்பை பறிமுதல் செய்தனர். இதுவரை சிறிய வகை மண்ணுளிப் பாம்புகளை மட்டுமே பறிமுதல் செய்த வனத்துறையினர் கொரோன முடக்கம் என்பதால் மண்ணுளி பாம்பு கடத்தல் நடைபெறாமல் இருந்துள்ளது.
இந்த நிலையில் தற்போது திருவள்ளூரில் மண்ணுளிப்பாம்பு விற்பனை மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. தற்போது பிடிபட்ட 4.5 கிலோ எடை சுமார் 5 அடி உயரமுள்ள ராட்சச மண்ணுளிப்பாம்பு பறிமுதல் செய்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மண்ணுளிப் பாம்பு மருத்துவத்திற்குப் பயன்படுவது என்று கூறி சட்டவிரோதமாக மண்ணுளிப் பாம்பை கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். மேலம் செங்குன்றம் பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டியபோது இந்த மண்ணுளி பாம்பு சிக்கியதாகவும் அந்த பாம்பை சட்டவிரோத மது விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது.
2 கோடி ரூபாய் என நூதன முறையில் பேரம் பேசி விற்க முயன்ற மண்ணுளி பாம்பு சிக்கியது. எந்த வித மதிப்பும் இல்லாத இது போன்ற அரியவகை மண்ணுளிப்பாம்பு அதிக விலைக்கு விலை போவதாக நாடகமாடி நூதன முறையில் விற்கப்படுகிறது என்று தெரிவித்த வனத்துறையினர் இதுவரை பிடிபட்ட பாம்பு களிலேயே மிகப்பெரிய மண்ணுளிப்பாம்பு இதுவென்று ஆச்சரியத்துடன் தெரிவித்தனர்.
0
0