கோவை அருகே வீட்டிற்குள் புகுந்த அரிய வகையான வெள்ளை நாகம் : பதறியடித்த ஓடிய உரிமையாளர்… ஸ்பாட்டுக்கு வந்த வனத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
22 June 2022, 9:41 pm
White Snake - Updatenews360
Quick Share

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் அருகே வெள்ளை நிற நாகம் தென்பட்டது. இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

பின்னர், மதுக்கரை வனச்சரக அலுவலர் அறிவுறுத்தலின் பேரில், பாம்பு பிடிக்கும் நிபுணர் மூலம் வீட்டின் காம்பவுண்ட் சுவரின் அருகேயிருந்த வெள்ளை நாகம் மீட்கப்பட்டது.

பின்னர், அந்த பாம்பு மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை வனத்திற்குள் விடுவிக்கப்பட்டது. இந்த பாம்பு 3.5 அடி நீளம் இருந்ததாகவும், இது வழக்கமான நாகப்பாம்புதான் எனவும், அல்பினோ குறைபாடு காரணமாக வெள்ளை நிறத்தில் இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், வெள்ளை நாகம் குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Views: - 385

0

0