மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்ட 1,300 கிலோ ரேஷன் அரிசி… கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்..!!

Author: Babu
31 July 2021, 1:24 pm
ration rice - updatenews360
Quick Share

கும்பகோணம் : பாபநாசம் அருகே மாவு மில்லில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பாபநாசம் அருகே பசுபதிகோவில் மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் ஜே.கே மாவு மில்லில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பாபநாசம் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து வருவாய் ஆய்வாளர், வட்ட வழங்கல் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர், பசுபதிகோவில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது 1300 கிலோ அடங்கிய 31 ரேஷன் அரிசி மூட்டைகள், 130 கிலோ கொண்ட 2 ரேஷன் கோதுமை மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து பாபநாசம் வட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்தது தொடர்பாக வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 187

0

0