நீடிக்கும் ரேஷன் பொருட்கள் தட்டுப்பாடு : 5 நாட்களாக பூட்டிக்கிடக்கும் ரேஷன் கடையால் பொதுமக்கள் அவதி

3 July 2021, 1:19 pm
ration shop closed - updatenews360
Quick Share

கன்னியாகுமரி : குமரி மாவட்டத்தில் ரேஷன் பொருட்களின் தட்டுப்பாட்டால் 5வது நாளாக ரேஷன் கடைகள் பூட்டிக் கிடப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

குமரிமாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தொடர்ந்து பல நாட்களாக ரேஷன் பொருட்களின் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. தமிழக அரசின் 14 பொருட்கள் அடங்கிய இலவச தொகுப்பு உட்பட அரிசி, எண்ணெய், சீனி உட்பட அனைத்து பொருட்களும் தட்டுப்பாடு காரணமாக விநியோகம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ரேஷன் கடை பெண் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 29 ஆம் தேதி ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, கடந்த 4 நாட்களாக கடைகள் திறக்கப்படாததால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

கடை அடைப்பிற்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த 22 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பபட வேண்டிய ரேஷன் பொருட்கள் இது வரை அனுப்பப்படாததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் நாகர்கோவில் செட்டிக்குளம் பகுதியில் இயங்கி வரும் நியாயவிலை கடை கடந்த 5 நாட்களாக பூட்டியே கிடப்பதால் ரேஷன் பொருட்கள் வாங்க வரும் ஏழை மக்கள் மிகுந்த வேதனையுடன் திரும்பி செல்கின்றனர்.

Views: - 274

0

0