வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்’ – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..!

13 August 2020, 11:12 am
Quick Share

தமிழகம் முழுவதும் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை திறப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், மக்களின் சிறமத்தை தவிற்கும் பொருட்டும் தமிழகம் முழுவதும் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்க அரசு திட்டமிட்டது.

இதன் தொடர்சியாக, அம்மா நகரும் நியாய விலைக் கடைகளை திறக்க 9.66 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இது குறித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் 5,36,437 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அம்மா நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்படும் நாள் மற்றும் இடம் ஆகியவற்றிற்கு மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொருட்கள் விநியோகிக்கும் இடமானது, அரசு கட்டடங்கள், உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியாய விலைக் கடைகள் தொடங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை வரும் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்கள், இணைப்பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Views: - 0 View

0

0