“EE SALA CUP NAMDE”… இந்த முறை கப் கன்ஃபார்ம் ; RCB அணிக்காக ரசிகர்கள் செய்த செயல்..!!

Author: Babu Lakshmanan
3 April 2023, 2:24 pm
Quick Share

கிருஷ்ணகிரி : ஐபிஎல்லில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத ஆர்சிபி அணி இம்முறை ஜெயிக்க வேண்டி ரசிகர்கள் பிரார்த்தனையுடன் வாழை பழத்தின் மீது எழுதி, தேர் மீது எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் எனப்படும் ஐபிஎல் கடந்த 2008 முதல் நடைப்பெற்று வருகிறது. இதுவரை 15 தொடர்களில் மும்பை (5), சென்னை (4) என பல அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அணில் கும்ளே, விரட் கோலி, டூ பிளஸ் என கேப்டன்கள் மாறினாலும், ஆர்சிபி என்னும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை வெற்றி கனியை பறிக்கவில்லை.

வருடந்தோறும் ஐபிஎல் தொடர் தொடங்கும் போதெல்லாம் ஆர்சிபி ரசிகர்கள் “ஈ சாலா கப் நம்தே” இந்த முறை கோப்பை எங்களதுதான் என சொல்லியும் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆக்கியும் வருவார்கள். கோப்பையை வெல்ல முடியவில்லை என்றதும் அடுத்த முறை கப் எங்களதுதான் என மனது தேற்றிக்கொள்வார்கள்.

ஆர்சிபி ரசிகர்களை மற்ற அணி வீரர்கள் வெச்சி செய்வதால், ஆண்டுதோறும் ஏமாற்றத்துடனே ஐபிஎல் போட்டிகளை ஆர்சிபி ரசிகர்கள் பார்த்து வருகிறார்கள். 16வது ஆண்டாக மார்ச் 31ல் தொடங்கிய ஐபிஎல் போட்டிகளில் ஆர்சிபி முதல் ஆட்டத்திலேயே மும்பை அணியை அதிரடியாக வென்று மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளது.

இந்தநிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கோப்பசந்திரம் என்னும் கிராமத்தில் தமிழகத்தின் திருப்பதி என்னும் தக்சன திருப்பதி, வெங்கடரமணசாமி கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் வழிபட்ட நிலையில், மனதில் வேண்டியதை நடக்க வாழைப்பழத்தை தேர் மீது எரிந்தால் நடக்கும் என்கிற ஐதீகத்தில், 15 ஆண்டுகளாக ஆர்சிபி வெல்லாததை, இம்முறை வெல்ல வேண்டுமென ரசிகர்கள், வாழைப்பழத்தில் ‘ஆர்சிபி, ஈ சாலா கப் நம்தே,’ என எழுதி தேர் மீது எரிந்து வேண்டுதல் நடத்தியது பார்ப்போரை சிரிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Views: - 435

0

0