நகைக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தல்: பல கோணங்களில் போலீசார் விசாரணை.

21 November 2020, 10:54 pm
Quick Share

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே நகைக்கடை மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஷராப் பஜார் மூங்கில்மண்டி வீதியை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் பஜார் பகுதியில் நகை கடை வைத்துக் கொண்டு மேலும் நிலம் வாங்கும் விற்கும்(ரியல் எஸ்டேட் ) தொழில் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் ஒன்று ஆம்பூர் அடுத்துள்ள காட்டுக் கொல்லை புதூர் என்ற இடத்தில் 1 .5 ஏக்கரில் ரோஜா கார்டன் என்ற பெயரில் காலி வீட்டுமனை உள்ளது. அதை விற்பனை செய்வதாக தரகர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று ரத்தினம் என்கிற தரகர் நிலத்தை பார்ப்பதற்கு ஆட்கள் வந்துள்ளார்கள் என்று தொலைபேசி மூலம் திலீப்குமாரை தொடர்பு கொண்டு தரகர் நிலத்தை பார்ப்பதற்கு ஆட்கள் வந்துள்ளார்கள் உடனே வரும்படி அழைத்துள்ளார். இந்நிலையில் திலீப்குமார் தன்னுடைய காரில் கார் ஓட்டுநர் சேகர் என்பவரை அழைத்துக்கொண்டு ரோஜா கார்டன் பகுதிக்கு சென்று உள்ளார்கள். அங்கே திலிப்குமார் தன்னுடைய காரில் இருந்து இறங்கிய உடன் கர்நாடகா பதிவு எண் கொண்ட காரில் காத்துக் கொண்டிருந்த 3 மர்ம நபர்கள் ஓட்டுநர் சேகர் மற்றும் தரகர் இரத்தினம் ஆகியோர் கண் முண் திலீப்குமாரை இழுத்து காரில் ஏற்றி வேகமாகச் சென்று உள்ளனர்.

அவரை கடத்திய அந்த கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட கார் வனப்பகுதி வழியாக ஆலங்காயம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் சேகர் மற்றும் தரகர் ரத்தினம் ஆகியோர் செல்போன் மூலமாக திலீப் குமாரின் வீட்டிற்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்த திலீப் குமாரின் சகோதரர் மனோகர்லால் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் தன்னுடைய அண்ணன் திலீப்குமார் கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

புகாரின் பேரில் ஆம்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சச்சிதானந்தம் தலைமையிலான போலீசார் கடத்தப்பட்ட பகுதியிலிருந்து வனப்பகுதிகள் முழுவதுமாக தற்போது தேடி வருகின்றனர். ஆம்பூரில் நகை கடை மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் திலிப்குமார் பணத்திற்காக கடத்தப்பட்டாரா?அல்லது ஏதேனும் பணம் கொடுத்தல் வாங்கல் பிரச்சினையா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா? என்று போலீசார் வெவ்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 15

0

0