9 நிமிடங்களில் 200 ஆங்கில வார்த்தைகள்: சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கோவை சிறுவன்…குவியும் பாராட்டு..!!

Author: Aarthi Sivakumar
28 November 2021, 2:55 pm
Quick Share

கோவை: கோவையை சேர்ந்த பள்ளி மாணவன் 100 ஆங்கில சொற்கள் மற்றும் எதிர் சொற்கள் என 200 சொற்களை 9 நிமிடங்கள் 25 விநாடிகளில் வேகமாக கூறி சாதனை புரிந்துள்ளார்.

கோவை மாவட்டம் செட்டி வீதி அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர்-சங்கீதா தம்பதியர். இவர்களின் இளையமகன் பிரித்திவ். பத்தாம் வகுப்பு படித்து வரும் இவர், சிறு வயது முதலே ஆங்கிலம், தமிழ் எழுத்துக்களை தலைகீழாக எழுதுவது மற்றும் வாசிப்பதில் கவனம் செலுத்தியுள்ளார்.

தொடர்ந்து இதில் பல்வேறு உலக சாதனைகள் புரிந்துள்ள மாணவன் ப்ரித்திவ், தொடர்ந்து புதிய சாதனை ஒன்றை செய்துள்ளார். இதில்,100 ஆங்கில சொற்கள் மற்றும் அதற்கான எதிர் சொற்கள் என 200 சொற்களை ஒன்பது நிமிடங்கள் 25 விநாடிகளில் வேகமாக கூறி சாதனை புரிந்துள்ளார்.

தமிழகத்தில் முதன் முறையாக நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை கண்காணித்த நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் தீர்ப்பாளர் சிவ முருகன், மாணவருக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து சாதனைகள் செய்து வரும் மாணவருக்கு,நோபள் புக் ஆப் சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மாணவன் பிரித்திவ் தனது இரு கைகளாலும், தமிழ் எழுத்துக்களை தலை கீழாக வேகமாக எழுதுவது,தலைகீழாக 500 தமிழ் சொற்களை உச்சரிப்பது என ஏற்கனவே பல உலக சாதனை செய்துள்ளவர் என்பது குறிப்பிடதக்கது.

Views: - 182

0

0