சிலம்பம் சுற்றியபடி 10 கிலோமீட்டர் தூரம் ஓடி சாதனை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுவர்கள்..!!

Author: Rajesh
13 February 2022, 11:48 am
Quick Share

கோவை: சின்னவேடம்பட்டியை சேர்ந்த ஆறு வயது சிறுவன் உட்பட இரண்டு சிறுவர்கள் கையில் சிலம்பம் சுற்றிக்கொண்டே 10 கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடி சாதனை படைத்துள்ளனர்.

கோவை சின்னவேடம்பட்டி பகுதியை சேர்ந்த குணசேகரன்,ஜெயந்தி தம்பதியினரின் மகன் ரூபேஷ் ஆறு வயதான சிறுவன் ரூபேஷ் கராத்தே பயிற்சியுடன் சிலம்பமும் கற்று வருகிறார்.

இந்நிலையில் கொரோனா விழிப்புணர்வு சாதனையாக சிறுவன் ரூபேஷ்,சரவணன் என்ற மாணவருடன் இணைந்து பத்து கிலோ மீட்டர் தூரம் தொடர்ந்து ஓடிக்கொண்டே ஒற்றை சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

சின்னவேடம்பட்டியில் துவங்கி கோவில்பாளையம் வரை சென்று மீண்டும் கீரணத்தம் வழியாக மீண்டும் சின்னவேடம்பட்டி வந்து சேர்ந்தனர். சாதனை மாணவர்கள் நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

சாதனை மாணவர்களுக்கு தியாகு நாகராஜ் மற்றும் சிரவை சிவா ஆகியோர் சான்றிதழ் மற்றும் விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

Views: - 504

2

0