திருச்சியில் தேடப்பட்டு வந்த ரவுடி பிணமாக மீட்பு: பிணத்தை தோண்டி பிரேத பரிசோதனை

Author: Udhayakumar Raman
28 June 2021, 7:33 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் தேடப்பட்டு வந்த ரவுடியை கொன்று புதைத்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி ஸ்ரீரங்கம், அம்மாமண்டபம் ரோடு சங்கர் நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார்(36). ரவுடிகள் பட்டியலில் உள்ள இவரை காணவில்லை என்று ஸ்ரீரங்கம் காவல் நிலையத்திற்கு ரிஜிஸ்டர் தபால் மூலம் அவரின் தந்தை கணேசன் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்தப்பட்ட விசாரணையில் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த மம்மி என்கிற சந்துரு என்கிற சந்திரமோகன், கோவில்பிள்ளை, வடக்கு வாசலை சேர்ந்த டாங்கி என்கிற சங்கர், மணிமாறன், கீழவாசல் சேர்ந்த விஜயகுமார் ஆகிய 5 பேர் சிக்கினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,

நவீன் குமாரை கொன்று மேலூர் சாலை ஆண்டவர் ஆசிரமம் அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றுப் படுகையில் புதைத்து விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் ஸ்ரீரங்கம் உதவி ஆணையர் சுந்தரமூர்த்தி, ஆய்வாளர் பழனியப்பன் தலைமையில் சம்பவ இடத்திற்கு ஸ்ரீரங்கம் தாசில்தார் மகேந்திரன், துணை தாசில்தார் சுரேஷ், மேலூர் விஏஓ பத்மா, வெள்ளி திருமுத்தம் விஏஓ குமார், தலையாரிகள் முத்துலட்சுமி, ரவி ஆகியோர் முன்னிலையில் இப்படத்தை தோண்டி எடுத்தனர். பின்னர் உடல் அங்கேயே ஸ்ரீரங்கம் அரசு மதுரகன் செல்வமுத்து, குமரன், வெங்கட்ராமன் ஆகியோரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Views: - 259

0

0