புதுக்கோட்டை மாவட்டம் ஆவாரக்குடிப்பட்டியில் 51வது மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு, வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு பதக்கங்களை கழுத்தில் அணிவித்தார்.
இதன்போது, அமைச்சர் TRB ராஜாவின் மகன் சூரிய ராஜபாலு, அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து, அதை கையில் பெற்று புகைப்படத்திற்கு மட்டும் நின்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆளுநர், அண்ணாமலை போன்ற சிறப்பு விருத்திகளை கல்வி நிறுவனங்கள் தகுதிக்கு ஏற்ப அழைக்கின்றன.
அவர்களுக்கு மரியாதை அளிப்பது அவசியம். விருது பெறுவோர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். தனிப்பட்ட உணர்வுகளை அப்போது வெளிப்படுத்துவது சரியல்ல.
திமுக எல்லாம் அரசியலாக்கி, காழ்ப்புணர்ச்சியை வளர்க்கிறது. TRB ராஜா தனது மகனை அழைத்து, பாரபட்சமாக நடக்க வேண்டாம் என அறிவுரை கூற வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.