கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தற்காலிகமாக மூடல்..! ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் நடவடிக்கை!!

22 October 2020, 6:43 pm
RTO Office 1 - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் வட்டார போக்குவரத்து அலுவலக (மத்திய) ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அந்த அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 57 வயது அலுவலக உதவியாளருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதன் காரணமாக அந்த அலுவலகம் நாளை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் நடைபெறும் என்றும், தொடர்ந்து மற்ற ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொண்ட பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அறிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் சனிக்கிழமைகளில் அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் நாளை மற்றும் மறுநாள், அதைத்தொடர்ந்து ஆயுத பூஜை விடுமுறை வரை செயல்படாது என அறவிக்கப்பட்டுள்ளது.

Views: - 31

0

0