இனி சனிக்கிழமைகளிலும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்…விரைவில் தட்கல் முறை அறிமுகம்: அமைச்சர் பி.மூர்த்தி அறிவிப்பு..!!

Author: Rajesh
28 April 2022, 5:34 pm
Quick Share

சென்னை: பொது மக்களின் வசதிக்காக விடுமுறை நாளான சனிக்கிழமையும் சார்-பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்துள்ளார்.

வணிகவரி மற்றும் பதிவுத் துறையில் திமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, அரசிற்கு வரவேண்டிய வருவாய் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி பதிலுரையாற்றினார்.

sub-registrar offices: முதலில் வருபவருக்கே முன்னுரிமை; தமிழக சார்-பதிவாளர்  அலுவலகங்களில் அறிமுகம்! - first-in first-out system to be introduced in all  tn sub-registrar offices | Samayam ...


வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் 32 புதிய அறிவிப்புகளை அமைச்சர் பி.மூர்த்தி வெளியிட்டார். அதன்படி பதிவுத்துறையில் தட்கல் முறை அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களில் சிலர் குறுகிய கால அவகாசத்தில் ஆவண பதிவை மேற்கொள்ள விரும்புகின்றனர்.

இவர்களின் வசதிக்காக ஆவணப் பதிவிற்கான முன்பதிவு டோக்கன்களை கூடுதல் கட்டணம் பெற்று தட்கல் முறையில் அறிமுகப்படுத்தப்படும். முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையிலான ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 சார்பதிவாளர் அலுவலகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படும். ஒரு அவசர முன்பதிவு டோக்கனுக்கு (தட்கல்) ரூ.5000 கட்டணமாக வசூலிக்கப்படும்.

Sub-Registrar office Archives - Star of Mysore

மேலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்கள் தாங்கள் ஆவணப்பதிவு மேற்கொள்ள ஏதுவாக வார விடுமுறை நாள் அன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் இதனை கருத்தில் கொண்டு சனிக்கிழமைகளிலும் பதிவுப்பணி மேற்கொள்ளப்படும் இதற்கு கட்டணமாக ஆயிரம் வசூலிக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி புதிய அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Views: - 762

0

1