கொலை செய்ய ஒத்திகை…. அரசு கல்லூரி மாணவர்கள் அட்ராசிட்டி : வைரலாகும் அதிர்ச்சி வீடியோ… ஸ்கெட்ச் போட்ட காவல்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
9 July 2022, 4:33 pm
Rehearsal For Murder - Updatenews360
Quick Share

விழுப்புரம் : கொலை செய்ய ஒத்திகை பார்க்கும் கல்லூரி மாணவர்களின் வீடியோ சமுக வளைத்தளத்தில் பரவி அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தான் அதிகளவில் குற்றவாளிகளான காணப்படுகொன்றன.

இதனால் வரும்கால சமுதாயம் குறித்த அச்சம் அதிகரித்துவரும் நிலையில் விழுப்புரத்தில் கேங் வாரில் தங்களுக்கு எதிரான ஒரு இளைஞரை சக நண்பர்கள் கழுத்தறுத்து கொலை செய்வது, கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்வது போன்ற தத்தரூப காட்சி ஒன்று தற்போது சமூக வளைத்தளத்தில் வேகமாக உலா வந்துக்கொண்டிருக்கிறது.

இதில் கல்லூரி மாணவர்களின் அட்ராசிட்டி மற்றும் வன்முறை அடங்கிய வீடியோவான அவை சமூக வளைதளங்களில் பரவி வருவதால் பொது மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ பதிவு செய்த தோகைப்பாடி சேர்ந்த சந்தோஷ், சந்துரு ஆகிய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களின் இத்தகைய செயல் மாணவர்களிடையே அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகி வரும் நிலையில் இதுபோன்று வன்முறை கலாச்சார வீடியோக்கள் வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமுக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர் .

Views: - 128

0

0