சர்வதேச தபால் சேவை மீண்டும் துவக்கம்: கோவை கோட்ட தபால் அதிகாரி தகவல்..!!

Author: Aarthi Sivakumar
12 August 2021, 6:10 pm
Quick Share

கோவை : கோவையில் இருந்து இனி சர்வதேச தபால் சேவை வழக்கம் போல் இயங்கும் என்று தபால்துறையின் கோவை கோட்ட கண்காணிப்பாளர் விஜய தனசேகர் தெரிவித்துள்ளார்.

இந்திய அஞ்சல்துறையின் சர்வதேச அஞ்சல் சேவை பிரிவில், விரைவு அஞ்சல், பதிவு பார்சல், பதிவு அஞ்சல், ஐ.டி.பி.எஸ்., ஆகிய சேவைகள் வழங்கப்படுகின்றன. ஊரடங்கு காரணமாக சர்வதேச அஞ்சல் சேவைக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அஞ்சல் இயக்குனரகம் தளர்வுகளை அறிவித்துள்ளது.

தபால்துறையின் கோவை கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பது, கொரோனா ஊரடங்கால் தபால் துறைக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சர்வதேச தபால் சேவை இனி இயங்கும்.

புதிய தளர்வுகளின்படி, விரைவு அஞ்சல், 67 நாடுகளுக்கும், சர்வதேச பதிவு பார்சல், 101 நாடுகளுக்கும், சர்வதேச பதிவு அஞ்சல், 99 நாடுகளுக்கும், ஐ.டி.பி.எஸ்., சேவை, 14 நாடுகளுக்கும் அனுப்பலாம்

சர்வதேச தபால் சேவை மூலம் வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு தேவையான உடைகள், மருந்து மளிகை பொருட்கள் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை அனுப்ப முடியும். எனவே பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்த ரயில்நிலையத்தில் அமைந்துள்ள தபால் நிலையங்கள் மூலம் சர்வதேச தபாலை அனுப்பலாம்.

கோவை தலைமை அஞ்சல் நிலையத்தில் செயல்பட்டு வரும் சர்வதேச அஞ்சல் பதிவு மையத்தில், பார்சல்களை, பேக்கிங் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. மேலும் விபரங்களுக்கு, 82487 54861, 89460 65828, 98653 13037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 259

0

0